வியாழன், 3 மார்ச், 2011

தென்னை மரம்

               தென்னை மரம்- கற்பக விருட்சம், பனைகளின் அரசன், மரங்களில் சொர்கத்திற்கு நிகரானது என்றெல்லாம் வழங்கபடுகிறது.தென்னை பற்றி பல பழமொழிகள் உண்டு. 

              தென்னை தென் கிழக்கு ஆசியா நாடுகளில் அதிகம் விளைவிக்கபடுகிறது .பிலிபின்,இந்தோனேசியா,இந்தியா,இலங்கை மற்றும் பல ஆசியா நாடுகளில் தென்னை வளர்வத்ட்கான சூழ்நிலை சாதகமாக இருப்பதால் 
அதிக அளவு பரபளவில் உற்பத்தி செய்யபடுகிறது.மேலும் தென்இந்தியாவில் 
உள்ள தென்னைமரங்கள் மட்டுமே அதிக உற்பத்தி திறன் மிக்கவையாக திகழ்கிறது. ஆண்டிற்கு சராசரியாக 80 முதல் 150 தேங்காய் வரை விளைகிறது.
கலப்பு ரகங்களில் 200 அதற்கு மேலும் உற்பத்தியை பெருகமுடியும்.

இந்தியாவில் தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா,கர்நாடக,ஒரிசா மகாராஷ்டிரா மற்றும் கோவா ஆகிய மாவட்டங்களில் அதக அளவில் உற்பத்தி செய்யபடுகிறது. 

தென்னை ரகங்கள்:

1. மேற்கு  கடற்கரை நெட்டை - west coast tall- WCT

2.கிழற்கு கடற்கரை நெட்டை - east coat tall- ECT
     
3. டிப்தூர் நெட்டை 

4.செவ்விளநீர் 

5.சௌகட் ஆரஞ்சு குட்டை 

6. சௌகட் பச்சை குட்டை 

7.மலேசியன் மஞ்சள் குட்டை 

8.மலேசியன் ஆரஞ்சு குட்டை 

9.மலேசியன் பச்சை  குட்டை 

10.கங்கா பாண்டம் மற்றும் மேலும் பல ரகங்கள் உள்ளன 

மீண்டும் அடுத்த பதிவில்                                                                                                    


  கணேஷ் -பொள்ளாச்சி